மே 1குரு பெயர்ச்சி: எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம்?

குரு என்றால், இருட்டைப் போக்குபவர், கனமானவர் என்றும் பொருள்கள் உண்டு. குருவானவர் பெயர்ச்சி ஆவதைத்தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்று சொல்கிறார்கள்.

குரு பெயர்ச்சி வரும் மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை . குரு பெயர்ச்சியையொட்டி எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்கள் மட்டுமே குருத் தலங்களாக திகழ்கின்றன.

அந்த வகையில், சென்னை பாடியில் உள்ள வலிதாயநாதர் கோயில், தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில்,திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில், காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், வல்லநாடு கைலாச நாதர் கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வழிபாட்டால் நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது. எனவே குரு பெயர்ச்சி அன்று இந்த கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள்..! அதிலும் இந்த கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்புதான்.

Read More: இந்திய பெண்களுக்கு குட் நியூஸ்.!! AI தொழில்நுட்பத்தின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியும் வசதி.!!

Baskar

Next Post

ஷாக்!… பூமியில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது!… 5 வினாடிகளுக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

Mon Apr 22 , 2024
Oxygen: உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிக முக்கியமானது. ஆனால் பூமியில் 5 வினாடிகளுக்கு ஆக்சிஜன் வெளியேறினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூமியில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆக்ஸிஜன் இல்லாத வாழ்க்கையையும் பூமியையும் கற்பனை செய்வது கடினம். சிலர் பல நிமிடங்களுக்கு மூச்சு விடுவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆக்ஸிஜன் இல்லாமல் 5 வினாடிகளில் என்ன நடக்கும் என்பது கேள்வி […]

You May Like