விஜய்க்கு ‘விசில்’ போடு..! 2026 தேர்தலில் தவெக சின்னம் இதுதான்.. ‘ஒகே’ சொன்ன தேர்தல் ஆணையம்..?

vijay 2 1

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. முதல் தேர்தலிலேயே வலுவான முத்திரை பதிக்க கட்சி தீவிரமாகத் தயாராகி வருகிறது. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த விஜய் திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார்.


இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) தவெக தரப்பு அணுகியது. TVK இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்‌ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன், தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-இன் கீழ், விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சமர்ப்பித்தார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 184 ஒதுக்கப்படாத சின்னங்களில், 182வது சின்னமாக ‘விசில்’ உள்ளது. விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் விசில் சின்னம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததால், விசில் சின்னத்தையே முதலில் கேட்டது. இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

‘விசில்’ சின்னத்திற்கே கட்சி அதிக முக்கியத்துவம் அளிக்க காரணம் ‘பிகில்’ திரைப்படத்துடன் தொடர்புடையது. எளிமையான, மக்கள் சுலபமாகத் தொடர்புபடுத்தக்கூடிய, விரைந்து வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய சின்னமே கட்சிக்குத் தேவை என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது.

பேரணிகளின் போது தொண்டர்களிடையே எடுத்துச் செல்லவும், விநியோகிக்கவும் எளிதாக இருக்கும் என்பதால், விசில் தவெகவிற்கு சாதகமாக இருக்கும். அதன்படியே தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: அட.. காலையில் வெந்தைய நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..? யாரெல்லாம் குடிக்க கூடாது..?

English Summary

Whistle for Vijay..! This is the TVK symbol for the 2026 elections.. The Election Commission said ‘OK’..?

Next Post

2025-ஆம் ஆண்டில் டெல்லியில் 23,000+ பேர் மாயம்; பெண்களும் சிறுமிகளுமே அதிகம்! அதிர வைக்கும் பகீர் ரிப்போர்ட்!

Fri Dec 26 , 2025
இந்த ஆண்டு டிசம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 23,340 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்த தகவலை டெல்லி காவல்துறை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காணாமல் போன மொத்த நபர்களில், 14,166 பேர் பெண்கள், இது சுமார் 61 சதவீதமாகும், அதே நேரத்தில் 9,174 பேர் ஆண்கள் அல்லது சுமார் 39 சதவீதம் பேர் என்று அந்தத் தரவுகள் […]
missing people delhi 1

You May Like