விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது விஜய் கரூர் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் வரலாம்.. பாதிக்கப்பட்டவர்கள் 36 குடும்பத்தினர் கரூரில் இருக்கிறார்கள்.. மீதமுள்ளவர்கள் தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள்.. காவல்துறையும் ஏன் இதனை பெரிதுப்படுத்துகிறார்கள் என எனக்கு தெரியவில்லை.. கூட்டம் கூடினால் கூட மக்கள் அமைதியாக தான் இருப்பார்கள்.. ஒரு இறப்பு வீட்டிற்கு செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்..
ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் கரூரில் ஏதோ இரண்டு பூதங்கள் உள்ளது. உள்ளே வந்தால் அந்த பூதம் கடித்து சாப்பிட்டுவிடும் என்பது போல் பேசுகின்றனர்.. தயவு செய்து கரூருக்கு வாருங்கள்.. காவல்துறையும் இதனை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என தெரியவில்லை..” என்று தெரிவித்தார்..
அதிமுக கூட்டணிக்கு தவெக வரும் என்று இபிஸ் சூசகமாக பேசியது குறித்து பேசிய அண்ணாமலை “ தேர்தலுக்கும் கூட்டணிக்கும் நேரம் அதிகமாக உள்ளது.. அதிமுகவும் தவெகவுக்கும் வெவ்வேறு பாதையில் உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..” என்று தெரிவித்தார்..
விஜய்யை சிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக பயன்படுத்த பார்க்கிறது என்று திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ திருமாவளவன் ஏன் ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு நீக்கினார்.. ஆனால் தொடர்ந்து நட்புறவுடன் இருக்கிறார்.. ஆதவ் அர்ஜூனாவை தவெகவுக்கு அனுப்பி விட்டு பாஜகவை குறை கூறுகிறார்.. திருமா அவர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படைத் தன்மை உடன் நடந்து கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து திருமாவளவன் கார் மீது பைக் மோதியது குறித்து பேசிய அவர் “ விசிக தொண்டர்கள் நடந்து கொள்ளு விதத்திற்கு திருமாவளவன் தான் பொறுப்பு.. விசிகவினர் திருமாவளவன் கண்முன்னே ஒருவரை அடித்துள்ளார்.. வண்டியை உடைக்கின்றனர்.. அசிங்கமாக பேசுகின்றனர்.. ஆனால் அதற்கு இதுவரை ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.. காவல்துறையினர் ஏன் விசிகவினர் செய்த தவறுக்கு முட்டு கொடுக்கின்றனர்? அவருடைய கூட்டணியை சேர்ந்த கட்சியினர் மற்றும் தலைவர் விதிகளை மீறும் போது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் முதல்வர் மீது எப்படி மக்களுக்கு மரியாதை வரும்?” என்று தெரிவித்தார்..
Read More : கரூர் துயரம்.. தவெக நிர்வாகிக்கு 2 நாள் SIT காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!



