இந்தியர்கள் ஏன் இங்கே வேலை செய்கிறார்கள்..? நாடு கடத்துங்கள்..!! – இங்கிலாந்து பெண்ணின் பதிவால் சர்ச்சை

Heathrow Airport 1

பிரிட்டனின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றும் இந்திய மற்றும் ஆசிய ஊழியர்களை இங்கிலாந்து பெண்மணி சரமாரியாக சாடியிருக்கிறார். அவரின் பதிவு இணையத்தில் விமர்சனங்களை தூண்டியுள்ளது.


அந்த பதிவில், “விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசியா வம்சா வழியை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னேன். அவர்களை தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என்று கூறுகிறார்கள். அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் நுழையும் இடத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் அனைவரையும் நாடு நடத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு பெரும் விமர்சனங்களையும், கொந்தளிப்பையும் எழுப்பியுள்ளது.
பலர் இந்தப் பெண்ணின் கருத்துகள் இனவெறி என்று கடுமையாக கண்டித்துள்ளனர். ஒரு பயனர், “அந்த வேலைக்கு இங்கிலாந்து மக்கள் விண்ணப்பிக்கவில்லை.. அதனால் தான் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள்” என்று ஒருவர் கூறியிருந்தார். மற்றொரு பயனர் இனவெறியாக நடந்து கொள்கிறீர்கள் என்று சொன்னது சரிதான் என பதிலடி கொடுத்தார்.

மூன்றாவது பயனர், “நான் கடந்த வாரம் ஹீத்ரோவில் தரையிறங்கினேன். அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் சீராக, சிரித்த முகத்துடன் உதவி செய்தார்கள். இந்தப் பெண் சொல்வது அனைத்தும் பொய்” என்று தெரிவித்தார். “மொழி தெரியாதவர்கள் அந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட முடியாது. அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். இதை நீங்கள் ஏற்க மறுப்பது உங்கள் மனதுக்குள்ள உள்ள பாகுபாடு மட்டும்தான்,” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

Read more: “இது லேப்டாப் இல்ல.. வெடிகுண்டு” விமானத்தில் பீதியை கிளப்பிய நபர்.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!!

Next Post

2 விமானிகளும் பலி.. போர் விமான விபத்து.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 5 மாதங்களில் 3-வது சம்பவம்..

Wed Jul 9 , 2025
ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஜெட் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 இந்திய விமானப்படை (IAF) விமானிகள் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ரத்தன்கர் பகுதியில் நிகழ்ந்தது.. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக IAF தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய […]
AA1At9wt

You May Like