சிறுவயதிலிருந்தே நாம் இந்தியாவின் வரைபடத்தைப் பார்த்து வருகிறோம். பள்ளிகளில், போட்டித் தேர்வுகளில், அரசுக் கல்வி புத்தகங்களிலும் அந்த வரைபடம் அவசியமானதாக இருந்தது. அந்த வரைபடத்தில் எந்த மாநிலம் எங்கு இருக்கிறது என்பதை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், கவனமாகப் பார்த்தால் ஒரு விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. இந்திய வரைபடத்தின் அடியில் எப்போதும் இலங்கை சேர்ந்து இருக்கும்.
ஆனால் இலங்கை ஒரு தனி நாடு. அதன் மேலோ, நிலப்பரப்பிலோ இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படியிருக்க, ஏன் அது இந்திய வரைபடத்துடன் சேர்த்து காட்டப்படுகிறது? இதுவே பலர் எண்ணாத ஒரு கேள்வி. அதற்கான காரணம் கடல்சார் சட்டம் என்ற ஒரு சர்வதேச சட்டம், இந்தியாவும் அதில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாகும்.
கடல்சார் சட்டம் என்ன சொல்கிறது? 1956ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை “கடல்சார் எல்லைகள்” குறித்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. பின்னர் 1973 முதல் 1982 வரை நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி, எந்த நாட்டின் எல்லை கடலைத் தொடுகிறதோ, அந்த நாடு கடலில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் (சுமார் 370 கி.மீ) வரை “தன் கடற்பரப்பு” எனக் கொள்ளலாம். அந்தப் பரப்பில் உள்ள தீவுகள், கட்டமைப்புகள், கடல்சார் வளங்கள் அனைத்தும் அந்த நாட்டின் நியாயபூர்வமான தாக்கத்தில் வரும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள கடல் இணைப்பு: இந்தியாவின் கடைசி நிலப்பகுதியாகிய தனுஷ்கோடி (தமிழகம்) முதல் இலங்கை வரை வெறும் 18 கிலோமீட்டர் தூரமே உள்ளது. இதனால், இலங்கை இந்தியாவின் கடல்சார் பரப்புக்குள் வருகிறது.
அதனால் தான், கடல்சார் சட்டத்தின் படி, இந்தியாவின் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வரைபடத்திலும் இலங்கை காணப்படுவது கட்டாயம். இது இந்தியா இலங்கையின் மீது உரிமை கோருவதற்காக அல்ல, சட்டப்படி கடல் எல்லை வரைபடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தான். அதேபோல், இலங்கையும் தனது அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இந்தியாவின் சில பகுதிகளை (கடல்சார் பரப்புக்காக) காட்டுகிறது.
Read more: ரூ. 95,000 மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 30,950க்கு..! 40 கிமீ மைலேஜுடன்..!



