நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது விஜய் நடத்திய தவெக மாநாட்டையும், விஜய்யையும், தவெகவினரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ நான் பதர்களுக்குள் நெல்மணியை தேடவில்லை.. என்னிடம் இருப்பது பதர்கள் இல்லை.. வீரியம்மிக்க நெல்மணிகள் தான் உள்ளன.. நான் வைத்திருப்பது விதை நெல்.. தவெகவில் இருப்பது எல்லாமே பதர்கள்.. மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை பார்க்காதீர்கள்..
பிப்ரவரி 4-ம் தேதி நான் ஒரு மாநாடு போடுவென். மாநாடு எப்படி நடத்த வேண்டும் இந்தியாவுக்கு ஒரு படிப்பினையை கொடுப்பேன்.. மாநாட்டில் ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பதற்கு படிப்பினை கொடுப்பேன்.. மாநாடு என்றால் என்னவென்று நாங்கள் சொல்வோம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ மாநாட்டில் இறந்த தலைவரை பற்றி பேசினால் வாக்குகள் கிடைத்துவிடுமா? அந்த தலைவர்கள் வாக்குகள் தான் அந்தந்த கட்சிக்கு இருக்கிறதே.. அது எப்படி மற்ற கட்சிக்கு கிடைக்கும்..” என்று தெரிவித்தார்..
அப்போது தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை விஜய் அங்கிள் என அழைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சீமான் “ அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது.. அது ஜங்கிள் ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்.. அது ஏன் அங்கிள் அங்கிள்-ன்னு கத்துது.. அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அவர் நான்கரை வருடம் முதல்வராக இருந்த போது விஜய் ஏன் கேட்கவில்லை..? போன மாநாட்டில் சிஎம். சார்-ஆக இருந்தவர்? இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார்..” என்று தெரிவித்தார்..