அரசு பள்ளிகளில் மட்டும் ஏன் சாதி மோதல் நடக்கிறது…? திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி…!

annamalai 1

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறாத சாதிய மோதல்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கல்வித் துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. 2020-21-ல் தொடக்கப் பள்ளிகளில் 0.6 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2024-25-ல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுபோல உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள் ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான சாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்,கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன.

தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதல்வரும், அமைச்சரும் எப்போது விழித்துக் கொள்வார்கள் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Vignesh

Next Post

குடும்பத்தோடு திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் முன் அதிமுகவில் இணைந்த தலைவர்....!

Fri Oct 31 , 2025
ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. விறுவிறுப்பாக சுற்றுப்பயணம் […]
os maniyan 2025

You May Like