தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அனைத்து இயக்குனர்களும் எப்படியாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதே போல தான் கமல்ஹாசன் தேர்வும் இருக்கும் ஆனால் சமீப தேசிங்குராஜா, சக்கரவர்த்தி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் விக்ரம் திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
அண்மையில் இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் டாப் 20 இயக்குனர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அவர்களின் சிறந்த திரைப்படங்கள் கமல் சார் நடித்த திரைப்படமாகவே இருக்கும். பாலச்சந்தர், கே எஸ் விஸ்வநாதன், பாலு மகேந்திரா, பாரதிராஜா, மணிரத்தினம், கௌதம் மேனன் உள்ளிட்டோரியின் திரை வாழ்வில் எடுத்த மிக சிறந்த திரைப்படங்களில் கமல் நடித்திருப்பார். அதனால் தான் அவரை வைத்து படம் இயக்க பயமாக இருப்பதால் அந்த தேர்வையே நான் எழுதுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.