கர்வா சௌத் பண்டிகைக்கு புடவை வாங்கி தராததால் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 25 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் பாப்லி என்ற பெண்ணுக்கும் தர்ம்பால் என்பவருக்கும் திருமணமாகி 10 மாதங்கள் மட்டுமே ஆகிறது. பண்டிகையை முன்னிட்டு புதிய சேலை வேண்டும் என்ற தனது விருப்பத்தை பாப்லி தெரிவித்ததை அடுத்து தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரது கணவர் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்ததால், சண்டை அதிகரித்தது. எனவே பாப்லி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது..
TrueStoryUP என்ற எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் “உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில், கர்வா சௌத்துக்கு சேலை கிடைக்காததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி பாப்லி (25) மிகவும் கோபமடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபாலுடன் திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாப்லி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இது குறித்து விசாரணை மேற்கொள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாப்லியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தகராறு காரணமாக ஏற்பட்ட விரக்தியே பாப்லியின் கடுமையான நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. பாப்லியின் திடீர் மரணம் அக்கம் பக்கத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கர்வா சௌத் விழா தொடர்பான அழுத்தங்கள் குறித்து தம்பதிகளிடையே விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இதனிடையே கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது 35 வயது பெண் ஒருவர் துயர விபத்தில் இறந்தார். உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள குலாதி சந்தையில் தம்பதியினர் பைக்கில் சென்றபோது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது, மேலும் ஒரு லாரி அவர்கள் மீது மோதியது.
இதனால் சாலையில் விழுந்த பிறகு அப்பெண்ணி இதயம் சில நிமிடங்கள் துடித்துக்கொண்டே இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் பலத்த காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.