போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகிறது.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. போலீசார் ஒத்துழைப்பு அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணா தரப்பில், மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதன்படி இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : வரலாறு படைத்த தீபிகா படுகோன்..! ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்-ல் இடம்பிடித்த முதல் இந்திய நடிகை..!