அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, ஒரு ஆஃப்கான் நாட்டு நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, “கவலைக்குரிய நாடுகள்” என அமெரிக்கா கருதும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கிரீன் கார்டுகளையும் மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய உத்தரவின்படி, அந்த நாடுகளிலிருந்து வந்த அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட கிரீன் கார்டுகள் அனைத்தையும் “முழுமையான, கடுமையான மறுபரிசீலனைக்கு” உட்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் உத்தரவின்படி, கவலைக்குரிய நாடுகளில் இருந்து வந்த ஒவ்வொரு வெளிநாட்டு நபருக்கும் வழங்கப்பட்ட ஒவ்வொரு கிரீன் கார்டையும் முழு அளவிலும், கடுமையாக மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று ஜோசப் எட்லோவ் தெரிவித்தார்.. அமெரிக்கா மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பே மிக முக்கியம் எனவும், முன்னாள் ஜோ பைடன் நிர்வாகத்தின் “அபராதம் இல்லாத, கவனக்குறைவான குடியேற்றக் கொள்கைகளே” தற்போதைய நிலைக்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் “இந்த நாட்டின் பாதுகாப்பும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பும் முதலிடத்தில் உள்ளது. முந்தைய நிர்வாகத்தின் கவனக்குறைவான குடியேற்றக் கொள்கைகளின் விளைவுகளை அமெரிக்க மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் பாதுகாப்பு என்பது எந்த நிலையிலும் சமரசம் செய்ய முடியாத ஒன்று,” என்று அவர் கூறினார்.
அஃப்கான் நாட்டு நபரான ரக்மானுல்லா லகான்வால், வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை இல்லத்தின் அருகே இன்று இரண்டு நேஷனல் கார்டு பணியாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில், அமெரிக்க இராணுவ நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம் (20) உயிரிழந்தார். அமெரிக்க வான் படை ஸ்டாஃப் சர்ஜென்ட் ஆண்ட்ரூ வூல்ஃப் (24) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரக்மானுல்லா லகான்வால் 2021ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து குழப்ப நிலையிலான பின்வாங்கலுக்குப் பிந்தைய மீட்பு மற்றும் குடியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜோ பைடன் நிர்வாகம் மூலம் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டார். டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின், அவரது அகதி கோரிக்கை ஒப்புதல் பெற்றது.
இந்தியர்கள் புதிய கிரீன் கார்டு கட்டுப்பாட்டால் பாதிக்கப்படுமா?
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் இந்த கிரீன் கார்டு மீட்பு/மீறல் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படமாட்டார்கள்.. இந்த புதிய கொள்கை வழிகாட்டுதல் USCIS அதிகாரிகளை, குடியேற்ற விண்ணப்பங்களை சோதிக்கும் போது, 19 “உயர்-ஆபத்துகான நாடுகள் (high-risk countries)” என்ற பட்டியலில் உள்ள நாடுகளின் நாட்டுத்-தகவல்களைக் கருத்தில் கொள்ள வலியுறுத்துகிறது.
பட்டியலிடப்பட்ட நாடுகள்:
அப்கானிஸ்தான், மியான்மார், புருந்தி, சாட், காங்கோ குடியரசு, கியூபா, ஈக்வடோரியல் கினி, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லாஓஸ், லிபியா, சியரா லியோன், சோமாலியா, சுடான், டோ கோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுவேலா, ஏமன் ஆகியவை ஆகும்.. இந்த பட்டியலில் இந்தியா இல்லை.. எனவே இந்தியர்கள் இதில் சேரமாட்டார்கள்; நாட்டுப் பட்டியலில் இந்தியா இல்லை என்பதனால் அவர்கள் மீதான விசாரணை, மீறல் எண்ணிக்கை தகவல் ஆகியவற்றில் இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது.
USCIS (U.S. Citizenship and Immigration Services), இது அமெரிக்க உள்துறை பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அமைப்பு, வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது. இந்த புதிய கொள்கை வழிகாட்டுதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் விளைவு நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும், மேலும் நவம்பர் 27-ம் தேதி அல்லது அதன் பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.
அமெரிக்க அரசு வழங்கும் Green Card (Permanent Residence Card) பற்றிய தகவல்:
Green Card என்பது அந்த நபருக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கும் அடையாள அட்டை. இது வைத்திருப்பவருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட காலம் (பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை) முடிந்ததும், இது அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் பாதையை உருவாக்குகிறது.
Read More : உலகில் சிறைச்சாலையும் இல்லாத, குற்றவாளியும் இல்லாத நாடு; எது தெரியுமா?



