கபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா?

இம்மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் ஜூலை 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டொமினிகாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் ஓவல் பார்க் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது.


இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டத இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனை ஒன்றை முறியடிக்க தயாராகியிருக்கிறார்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கபில் தேவ் 43 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் அவரே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருக்கிறார். இச்சூழலில் இந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கபில் தேவை பின்னுக்குத் தள்ளி ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார். நிச்சயமாக இந்த தொடரில் ஜடேஜா அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

RUPA

Next Post

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் தம்பதிகள் ஆனால் வீட்டில் எந்த பொருளும் காணாமல் போகல…..! அப்படின்னா கொலைக்கான காரணம் என்ன……?

Tue Jul 4 , 2023
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார்(29) இவரது மனைவி சாரதா(20) இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காட்டிலின் தம்பதிகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை இருவரும் தலை கழுத்து போன்ற பகுதிகளில் விட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு […]
Crime POlice Rowdy

You May Like