ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது..
இதனிடையே ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.. இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.. கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையில் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் மத்திய அரசின் தணிக்கை வாரியம் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
சென்சார் போர்டு சார்பில் “ படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. எனவே பாதுகாப்பு படைகளை சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.. படத்தை பார்த்த பின்னர் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் இணைத்து அனுப்பப்படும். உரிய காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வங்கப்படும் என கூறிய பின்னரும் மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ள தணிக்கை குழு தலைவர் ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையவில்லை என்றால் மறு ஆய்வுக்கு அனுப்பலாம்.. ” என்று தெரிவிக்கப்பட்டது..
மேலும் “ ஜனவரி 5-ம் தேதி படம் மறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.. தணிக்கை சான்று வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ படக்குழு நீதிமன்றத்தை அணுக முடியாது.. மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது, நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.. அதற்குள் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார்கள்..” என்று தெரிவித்தது..
இதை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் தனது வாதங்களை முன்வைத்தது.. அப்போது “ தணிக்கை குழுவில் பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்தா மட்டுமே சான்று தராமல் நிறுத்தி வைக்க முடியும்.. அப்படி இல்லாத பட்சத்தில் மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? தணிக்கை வாரியம் ஒருமுறை முடிவு செய்த பின்னர் அதன் முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது..
தணிக்கை குழுவில் ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும்? தணிக்கை குழுவில் ஒருவர் கூறியது பரிந்துரையாக இருக்கலாமே தவிர புகாராக இருக்காது என்பது எங்கள் அனுமானம்.. சென்சார் போர்டு விதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது.. சென்சார் போர்டு சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தது..
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 9-ம் தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தார்.. அதன்படி இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.. இந்த தீர்ப்பு சினிமா வட்டாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read More : பராசக்தி படத்திற்கும் சென்சார் சிக்கல்..! 23 இடங்களில் கட்? 10-ம் தேதி ரிலீஸ் ஆகுமா?



