ஸ்ட்ரைக் அறிவிப்பு.. தமிழகத்தில் உள்ள மருந்தகங்கள் நாளை இயங்குமா..? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!

arunraj tvk

நாளை நாடுதழுவிய அளவில் மருந்துகங்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மருந்தகங்கள் இயங்குமா என்பது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மருந்தகங்கள் ஸ்ட்ரைக்கால் மக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் 50,000 மருந்தகங்கள் உள்ளன, நாளை ஸ்டிரைக்கின் போது 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும்..


அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மஸி, முத்து பார்மஸி போன்ற சங்கிலித் தொடர் மருந்தகங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை.. மருத்துவமனைகளில் இயங்கும் மருந்தகங்கள் மூடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. முதல்வர் மருந்தகம், கூட்டுறவு சங்க மருந்தகங்கள் உள்ளிட்ட அரசு ஆதரவு பெற்ற மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும்.. தனியார் மருத்துமனைகளில் இயங்கும் மருந்தகங்களில் நாளை வெளிமருந்து சீட்டிற்கும் மருந்துகள் வழங்கப்படும்..

அந்தந்த பகுதி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மருந்துகள் கிடைக்காத புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.. மருந்து ஆய்வாளர்கள் மாவட்ட அளவில் உதவி மையங்கள் அமைத்து அனைவருக்கும் மருந்து கிடைப்பதை உறுதி செய்வார்கள்..” என்று தெரிவித்தார்..

ஆன்லைன் மருந்தகங்களுக்கு எதிராக நாளை நாடு தழுவிய ஸ்டைரக்கிற்கு அகில இந்திய மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் சங்கம் (AIOCD) அழைப்பு விடுத்துள்ளது.. ஆன்லைன் மருந்தகங்களின் கட்டுப்பாடற்ற செயல்பாடு மற்றும் அவற்றின் கொள்ளை விலை நிர்ணய நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

மின்னணு மருந்தகத் தளங்கள், மருந்துச்சீட்டுகளை நேரில் சரிபார்க்காமலேயே மருந்துகளை விற்பனை செய்வதற்காக, ஒழுங்குமுறைத் தளர்வுகளைத் தீவிரமாகச் சுரண்டுவதாகவும், இது பழைய மருந்துச்சீட்டுகளை அபாயகரமான முறையில் மீண்டும் பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போலி மருந்துச்சீட்டுகளின் உருவாக்கம், ஆண்டி பயாடிக் மருத்துகள் மற்றும் பழக்கத்தை உருவாக்கும் மருந்துகளின் கட்டுப்பாடற்ற கிடைப்பிற்குத் தூண்டுகோலாக அமைவதோடு, நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனை (AMR) விரைவுபடுத்துவதன் மூலம் ஒரு கடுமையான பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தவெக அமைச்சரவையில் இடம்பெறப் போகும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யார் யார்..? முக்கிய தகவல்..!

English Summary

Minister for Medical and Family Welfare Arunraj has clarified whether pharmacies in Tamil Nadu will remain operational.

RUPA

Next Post

வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் செடிகள் இவைதான்..! நீங்கள் எங்கு இருந்தாலும், இவை இழப்பையே ஏற்படுத்தும்..!

Tue May 19 , 2026
According to Vastu, let us look at which types of plants are considered symbols of misfortune.
vastu tips for plants

You May Like