புதிய தொழிலாளர் சட்டங்கள்.. டேக் ஹோம் சம்பளம் குறையுமா? ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு!

Labour Codes

கடந்த மாதம் நவம்பர் 21-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.. அப்போது முதலே பல ஊழியர்களிடம் “டேக் ஹோம் சம்பளம் (in-hand) சம்பளம் குறையலாம்” என்ற அச்சம் உருவானது. புதிய விதிப்படி, “அடிப்படை சம்பளமும் அதனுடன் தொடர்புடைய கூறுகளும் மொத்த ஊதியத்தின் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனை உள்ளது.. இதனால், PF பங்களிப்பு அதிகரித்து, டேக் ஹோம் சம்பளம் Take-home salary குறையும் என்று பலர் நினைத்தனர்.


சம்பளம் குறையாது – மத்திய அரசு விளக்கம்

இந்த நிலையில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. திருத்தப்பட்ட புதிய ஊதிய அமைப்பின் நோக்கம் நிறுவனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் தெளிவை கொண்டு வருவதே தவிர, ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது அல்ல என்று தெளிவுப்படுத்தி உள்ளது.. இது தவறான புரிதல் என்றும் தெரிவித்துள்ளது..

புதிய ஊதிய விதிகள் காரணமாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் அதிகரித்தாலும், PF கணக்கீடு மாற்றமில்லை, ஏனெனில் PF என்பது மாதம் ரூ. 15,000 என்ற நிரந்தர உச்சவரம்பை (statutory ceiling) அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. பணியாளர் மற்றும் நிறுவனம் இருவரும் தன்னார்வமாக அதிக PF பங்களிப்பைத் தேர்வு செய்தால் மட்டும் அதற்கு மேல் கணக்கிடப்படும்.

அதனால், PF உச்சவரம்பில் (₹15,000) கணக்கிடப்பட்டிருக்கும் பெரும்பாலான சம்பளத்தாரர்களுக்கு, PF பிடிப்பு தொகை மாறாது, டேக் ஹோம் சம்பளம் குறையாது. இதனால், பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பளத்தில் எந்த மாற்றமும் தானாக ஏற்படாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் PF கணக்கீடு எப்படிப் பாதிக்கப்படும் என்பதை விளக்க, ஒரு உதாரணத்தை வெளியிட்டது.

உதாரணம்:

ஒரு ஊழியர் மாதம் ரூ.60,000 சம்பளம் பெறுகிறார்.

அடிப்படை சம்பளம்+ அகவிலைப்படி= ரூ.20,000

கொடுப்பவன்வுகள் = ரூ.40,000

புதிய தொழிலாளர் குறியீடுகள் அமலுக்கு வந்தாலும்:

PF இன்னும் ரூ.15,000-ஐ அடிப்படையாக வைத்து மட்டுமே கழிக்கப்படும். அதாவது முழு அடிப்படை சம்பளம் (ரூ.20,000) அடிப்படையாக எடுக்கப்படாது.

PF கழித்தல் :

நிறுவனத்தின் PF பங்களிப்பு : ரூ.1,800

ஊழியரின் PF பங்களிப்பு : ரூ.1,800

மாதாந்திர டேக் ஹோம் சம்பளம் : ரூ. 56,400 (எந்த மாற்றமும் இல்லை)

50% கொடுப்பனவு விதி என்ன?

புதிய தொழிலாளர் விதிகளில் கொடுப்பனவுகள் (HRA, travel, bonus, etc.) மொத்த ஊதியத்தின் 50% ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது. அதைக் கடந்த அளவு அடிப்படை ஊதிய கணக்கில்) சேர்க்க வேண்டும் என்ற விதி உள்ளது.. ஆனால் இதுவும் PF கணக்கீட்டை மாற்றாது.. ஏனெனில் PF தொடர்ந்து ரூ.15,000 அடிப்படையாகவே இருக்கும்.

புதிய சம்பள அமைப்பின் நோக்கம் பாரதிய நிறுவனங்களில் அனைவருக்கும் ஒரே விதமான, தெளிவான ஊதிய அமைப்பு கொண்டு வருவது தான் என்றும் சம்பளம் குறைக்க வேண்டுமென்ற நோக்கம் அரசுக்கு இல்லை மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது..

எப்போது டேக் ஹோம் சம்பளம் குறையும்?

ஒரே ஒரு சூழ்நிலையில் மட்டுமே டேக் ஹோம் சம்பளம் குறைய வாய்ப்பு உண்டு.. ஊழியரும் நிறுவனமும் சேர்ந்து, PF-ஐ ரூ.15,000-ஐ விட உயர்ந்த சம்பளத்தில் கணக்கிட ஒப்புக்கொண்டால். இது விருப்பப்பதேர்வு கட்டாயமானதல்ல என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதன் மூலம் PF ரூ.15,000 என்ற அடுக்கில் கணக்கிடப்படும் வரை டேக் ஹோம் சம்பளம் குறையாது என்பது, புதிய தொழிலாளர் விதிகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது..

Read More : ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய நற்செய்தி..! இனி உங்கள் தட்கல் டிக்கெட்டையும் எளிதாக முன்பதிவு செய்யலாம்..! எப்படி தெரியுமா?

RUPA

Next Post

தேங்காய் விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி...! குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு...!

Sat Dec 13 , 2025
2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று 2018-19 மத்திய பட்ஜெட்டில் அரசு […]
coconut farmers 2026

You May Like