வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படுமா?

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் ஆதார் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது,

இதற்காகவே தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு பற்றி நாடாளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர், இதற்கு பதிலளித்த மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது “நாடு முழுதும், தன்னார்வ அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. எனினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை. அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை, அவரவர் விருப்பத்தின் பேரிலானது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

Kathir

Next Post

குளிர்சாதனப்பெட்டியில் வைத்து முட்டை உண்ணும் பிரியர்களா நீங்கள்.. இந்த பதிவு உங்களுக்கு தான்..!

Sat Dec 17 , 2022
முட்டை பிரியர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். காலை மதியம் மற்றும் இரவிலும் சிலர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்காக மொத்தமாக முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கும் நடைமுறையானது எல்லார் வீட்டிலும் தறபோது நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது.  ஆய்வுகளில் இப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது என கூறுகிறது. ஏனென்றால் முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் முட்டையின் சுவை குறைந்து விடுகிறது. மற்றும் அதனால் […]

You May Like