தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வுதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என்று அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இந்த குழு அதன் பரிந்துரையை அறிக்கையை ஒன்பது மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அதாவது செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் இந்த குழு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகி வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் மாதத்திலேயே பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தலைமை செயலக வட்டாரத்தினர் கூறுகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
Read more: செம வாய்ப்பு…! இந்திய ரயில்வேயில் 6238 காலி பணியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!