காலப் பயணம் அதாவது டைம் ட்ராவல் என்பது ஒரு நபரையோ அல்லது பொருளையோ காலப்போக்கில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ பயணிக்க அனுமதிக்கும் ஒரு கருத்தாகும். இது இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு அறிவியல் கோட்பாடு, ஆனால் இது பல அறிவியல் புனைகதைகளிலும் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளது. டைம் ட்ராவல் ஒரு அறிவியல் புனைகதை கருத்தாகவே நீடிக்கிறது, மேலும் அதன் யதார்த்தத்தை நிரூபிக்க உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. இருப்பினும், விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் அதன் கோட்பாடுகள் மற்றும் முறைகள் குறித்து பணியாற்றியுள்ளனர். சமீபத்தில், ஒரு மனிதனின் டைம் ட்ராவல் தொடர்பான கூற்று சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
டைம் ட்ராவல் செய்த நபர்?
தி கார்டியன் பத்திரிகையின் அறிக்கையின்படி, தன்னை ஒரு டைம் ட்ராவலர் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு டிக் டாக் பிரபலம், 2671 ஆம் ஆண்டிற்குப் பயணித்து விட்டு 2024 ஆம் ஆண்டிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்த டைம் ட்ராவலுக்கு பிறகு, அவர் பல விசித்திரமான கூற்றுகளை வெளியிட்டார்.. அவரின் கருத்த்கள் மக்களை திகைப்பில் ஆழ்த்தின. 2671 ஆம் ஆண்டிலிருந்து வந்த ஒரு டைம் ட்ராவலர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபர், இந்த ஆண்டு ஒரு விசித்திரமான ஆற்றல் உட்பட ஐந்து வியத்தகு நிகழ்வுகள் குறித்து எச்சரித்துள்ளார். மேலும், நாம் இறப்போமா இல்லையா என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஈனோ அலாரிக் என்ற ஒரு மனிதருக்குச் சொந்தமான @radianttimetraveller என்ற டிக்டாக் கணக்கு, எதிர்கால நிகழ்வுகளைக் கணித்துள்ளது. இரட்டை கிரகங்கள் பூமியுடன் மோதுவது, மனிதர்கள் ஏலியன்களை சந்திப்பது, ஏன் மூன்றாம் உலகப் போர் வரை அவர் கணித்திருந்தார். இப்போது, காலப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் பயமுறுத்தும் சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2671 ஆம் ஆண்டில் ஒரு வாரத்திற்கு சூரியன் மறைந்துவிடும்!
அந்த மனிதன், ஒரு வாரத்திற்கு சூரியன் மறைந்துவிடும் என்று கூறினார். பின்னர், ஒரு விசித்திரமான சக்தி தோன்றி, யாருக்கும் மருந்து இல்லாத ஒரு நோயைப் பரப்பும் என்றும் கூறினார். நவம்பர் 9, 2671 அன்று, சூரியன் ஒரு வாரத்திற்கு முழுமையாக மறைந்துவிடும் என்றும், நவம்பர் 12 அன்று, அண்டார்டிகாவில் பனிக்கு அடியில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு வேற்றுகிரகவாசி கண்டுபிடிக்கப்படுவார் என்றும், அது ஒரு மர்மமான நோயை ஏற்படுத்தும் என்றும், அந்த நோய் உலகெங்கிலும் வேகமாகப் பரவி, அதற்கு எந்த மருந்தும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலான உடனேயே, பயனர்கள் பீதியடைந்தனர். மற்றொரு பயனர், “அந்த நேரத்தில் நாம் அங்கு இருக்க மாட்டோம், கடவுளுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “ஒரு வாரத்திற்கு இருள் சூழ்ந்திருக்கும், மின்சார நிறுவனங்கள் லாபம் அடையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : தாடி இல்லாத இயேசுவின் அரிய பழங்கால ஓவியம்.. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!



