இந்த வார இறுதிக்குள் அமெரிக்க ராணுவம் ஈரான்மீது இராணுவ தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிபர் டொனால் டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன..
வெள்ளை மாளிகைக்கு தகவல்
சமீப நாட்களில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா விமானப்படை மற்றும் கடற்படை படைகளை பெரிதும் குவித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த வார இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவம் தயாராக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் இராணுவ தலையீட்டின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து, ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளி நாடுகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
புதன்கிழமை, ஈரான் தொடர்பான தற்போதைய நிலவரங்களை ஆய்வு செய்ய, வெள்ளை மாளிகையில் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம் நடத்தினர்.
அதே நாளில், அதிபர் டிரம்ப், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இருந்து, முந்தைய நாள் நடைபெற்ற ஈரானுடன் உள்ள மறைமுக பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் அதிபர் முடிவு எடுப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை: தெளிவான முன்னேற்றம் இல்லை
செவ்வாய்க்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தையில், அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் மூன்றரை மணி நேரம் எழுத்து வடிவில் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். ஆனால், அந்த உரையாடல்கள் தெளிவான உடன்படிக்கையின்றி முடிந்தன. ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளர், இரு தரப்பும் “வழிகாட்டும் சில கொள்கைகள்” மீது ஒப்புக் கொண்டதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிகாரி, “இன்னும் பல விவரங்கள் பேசப்பட வேண்டியுள்ளது” என்றார்.
அடுத்த சில வாரங்களில் ஈரான் விளக்கம்
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், “அடுத்த சில வாரங்களில் ஈரான் தனது பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார். அந்த காலகட்டத்தில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்குமா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்தார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பயணம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மேக்ரோ ரூபியோ Marco Rubio, பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலுக்கு பயணம் செய்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து அவர் விளக்கமளிக்க உள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவக் குவிப்பு அதிகரிப்பு
இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க இராணுவக் குவிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விமானப் படையில் F-22, F-35, F-16 போர் விமானங்கள், மேலும் பல வானில் எரிபொருள் நிரப்பும் டாங்கர்கள் இடம்பெற்றுள்ளன. இது நீண்டகால இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்பை சுட்டிக்காட்டுகிறது.
இராணுவ விமான இயக்கங்களை கண்காணிக்கும் சமூக ஊடக கணக்குகளும் இந்த நகர்வுகளை உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிகாரி ஒருவர், ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதியில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
Read More : சுரங்கத்திற்குள் பயங்கர வெடிவிபத்து..!! 38 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி..!! 27 பேர் கவலைக்கிடம்..!!



