வெற்றி அதிரடி தொடருமா?… இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோதல்!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழன்) நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் இந்தியா, தனது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கும் இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் சிரமமின்றி இலக்கை விரட்டிப்பிடித்தது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

இந்தநிலையில், இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 33வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பேட்டிங், பவுலிங் என சம பலத்தில் இருக்கும் இந்திய அணி, அடுத்து வரப்போகும் முக்கியமான ஆட்டங்களுக்காக பிரதான வீரர்களை தயார் செய்யும் வகையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் அணி நிர்வாகம் மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், கணுக்கால் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.அதாவது நெதர்லாந்து அணியுடனான ஆட்டம் வரை அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

பேட்டிங்கில் கில், ஸ்ரேயஸ் ஐயர் இருவருமே இன்னும் சிறப்பான இன்னிங்ஸை பதிவு செய்யவில்லை. எனவே இன்றைய ஆட்டம் அதற்கொரு வாய்ப்பாக அமையலாம். ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா மும்பையை சேர்ந்தவர். மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார். இந்த நிலையில், அந்த மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு அதிக வேலை இல்லை என்பது ரோஹித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் நிச்சயம் ரோஹித் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்வார். அந்த இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தான். அஸ்வின் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராகவே உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பதால் அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இலங்கை அணியை பொறுத்தவரை ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், வலுவான இந்தியாவை சந்திக்கிறது. காயம் காரணமாக பிரதான வீரர்கள் பங்கேற்காததும் போதிய சர்வதேச அனுபவம் வாய்ந்த இல்லாத இளம் வீரர்கள் இருப்பதும் இலங்கையை வெகுவாக பாதிக்கிறது. இதுவரை 6 ஆடிய 6 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 7வது வெற்றியை உறுதி செய்யும் நோக்கி இந்திய அணி அடித்து ஆடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள இலங்கை அணி, இந்தியாவின் வெற்றியை பாதிக்கும் நிலையில் இல்லை என்றே கூறலாம்.

Kokila

Next Post

'இடி சத்தம் காதை அடைக்க கொட்டப்போகும் கனமழை’..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

Thu Nov 2 , 2023
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், “இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

You May Like