பல்கேரியாவின் பாபா வாஙாவின் கணிப்புகளைப் போலவே, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹியின் ஒரு புதிய கணிப்பு உலகம் முழுவதும் கவலை கிளப்பியுள்ளது. ஒரு மிகப் பயங்கரமான விண்கல் பூமியை விரைவில் தாக்கப் போகிறது என்று அவர் கணித்துள்ளார்.. அது மனிதகுலத்தையும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முழுமையாக அழிக்கக்கூடிய பெரிய பேரழிவு உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் விண்கல் மோதல் நிகழும் நாள் “உலகத்தின் கடைசி நாள்” ஆக இருக்கும் எனவும், நாம் அறிந்த அனைத்தும் கணநேரத்தில் அழிந்து போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இவை அறிவியல் ஆதாரம் இல்லாத, ஜோதிட அல்லது ஆன்மீக கணிப்புகள் மட்டுமே.. உலகத்தின் முடிவு குறித்து இப்படிப்பட்ட கணிப்புகள் பல தசாப்தங்களாக சொல்லப்பட்டாலும், அவை அப்படியே பலிக்கவில்லை.
ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹி (Pakistan’s Nostradamus) தனது கணிப்பில் ஒரு “வானியல் பேரிடர்” ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். 2000-ம் ஆண்டு அவர் எழுதிய “The Religion of God (Divine Love): Untold Mysteries and Secrets of God” என்ற புத்தகத்தில் ” ஒரு விண்கல் பூமியை முழுமையாக அழிக்க பூமியின் நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியை 20–25 ஆண்டுகளுக்குள் தாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கணித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால், 2025-ம் ஆண்டில் அவரின் கணிப்புகள் நடக்கலாம் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.. விண்கல் பூமியைத் தாக்கும் போது, மிகப் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும், சுனாமி அலைகள் நகரங்களை மூழ்கடிக்கும், உலகின் தற்போதைய அமைப்பு முற்றிலும் அழியும் என அவரின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.இந்த கூற்றுகள் அனைத்தும் நம்பிக்கை அடிப்படையிலானவை மட்டுமே. NASA, ESA போன்ற பெரிய விண்வெளி அமைப்புகள் இதை ஆதரிக்கும் எந்த அறிவியல் தகவலும் வெளியிடவில்லை. 2025-ல் பூமியைத் தாக்கக்கூடிய கோள்கோள் பற்றிய எச்சரிக்கையில் எதுவும் இல்லை.
பூமியை விண்கல் தாக்கப் போகிறதா?
அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA மற்றும் உலகின் பிற நிறுவனங்கள், அடுத்த சில மாதங்களில் பூமியை தாக்கப் போகும் விண்கல் குறித்து கண்டறியவில்லை.. சமீபத்தில் பூமிக்கு நெருக்கமாக வந்த ஒரே கோள்கோள் 3I/ATLAS மட்டும். இது நமது சூரியக் குடும்பத்திலிருந்து வந்த பொருள் அல்ல.. அது கூட பூமிக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காத தூரத்தில் இருக்கிறது.
புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
சில விண்கற்கள் தற்போது சூரியனின் அதிக ஒளிக்கதிர்களில் மறைந்திருப்பதால் அவற்றை கண்டறிய முடியாமல் இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. வெள்ளி (Venus) கோளின் பாதையைப் பயன்படுத்தி, சூரிய ஒளியில் மறைந்துள்ள இத்தகைய பொருட்களை எதிர்காலத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த ஆய்வு தற்போது பூமிக்கு வரும் எந்த ஆபத்தான கோள்கோளும் உள்ளது என்று எந்த ஆதாரமும் அளிக்கவில்லை.
ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹி யார்?
ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹி ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த தீர்க்கதரிசி ஆவார்.. அவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, 2001-ல் திடீரென காணாமல் போனார். ஆனால் அவர் இறக்கவில்லை என்றும், மக்கள் கண்களில் இருந்து மறைந்து மட்டுமே உள்ளார் என்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.. அவரை “பாகிஸ்தானின் நோஸ்ட்ரடாமஸ்” என்று அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.



