“ என்னை திருமணம் செய்து கொள்வாயா?” புடினின் செய்தியாளர் சந்திப்பில் காதலிக்கு புரபோஸ் செய்த நபர்..! வீடியோ..!

putin press proposal

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடத்தும் செய்தியாளர் சந்திப்புகள் பல்வேறு காரணங்களால் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பு, ஒரு அரசியல் காரணத்தால் அல்ல; ஒரு காதல் புரோபசல் (proposal) காரணமாக சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.


23 வயதான கிறில் பஜானோவ் (Kirill Bazhanov) என்ற செய்தியாளர் ரஷ்ய அதிபர் புடின் முன்பு தனது காதலிக்கு புரபோஸ் செய்தார்.. அப்போது “என் காதலி இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறிய அவர், சிறிது நேரம் இடைவேளை எடுத்துக்கொண்டு, “ஒல்கா, நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? தயவுசெய்து திருமணம் செய்து கொள்… நான் உன்னிடம் புரபோஸ் செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த எதிர்பாராத காதல் புரபோஸ் , அந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் அந்த செய்தியாளர் அதிபர் புடினை நோக்கி, “திரு அதிபரே, எங்கள் திருமண விழாவில் நீங்கள் கலந்து கொண்டால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று கேட்டார்.

புடின், திருமண விழாவில் கலந்து கொள்வது குறித்து நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் அவர் இளம் குடும்பங்களின் பொருளாதார நிலை பற்றி பேசும்போது, நகைச்சுவையாகவும், ஆதரவாகவும், “ஒரு ஆண் குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும். இப்போது நாம் எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் பணம் சேகரித்தால், குறைந்தது திருமண செலவுக்காவது உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த தொகுப்பாளர், “அப்பெண் உன்னை திருமணம் செய்வார்” என்று சொன்னதும், அந்த தருணம் மேலும் இனிமையாக மாறியது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சிலர், “புடின் உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொள்வாரா?” என்று கேள்வி எழுப்பினர்.

ஒருவர், “அது மிகவும் அழகான தருணம்” என்று பாராட்டினார். மற்றொருவர், “அவர் ‘ரேமண்ட் ரெட்டிங்டன்’ (ஒரு பிரபல கதாபாத்திரம்) போல இருக்கிறார்” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.

இன்னொருவர், “யாராவது எனக்கும் ஒரு ரஷ்ய மனைவியை தேடி தர முடியுமா?” என்று கிண்டல் செய்தார்.

மொத்தத்தில், அரசியல் செய்திகளுக்கிடையே நடந்த இந்த காதல் முன்மொழிவு, அந்த செய்தியாளர் சந்திப்பை உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு இனிய நிகழ்வாக மாற்றியது.

Read More : இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்குக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.. தோஷகானா ஊழல் வழக்கில் தீர்ப்பு..!

English Summary

A 23-year-old journalist named Kirill Bazhanov proposed to his girlfriend in front of Russian President Putin.

RUPA

Next Post

திமுக தீய சக்தியா? விஜய்யின் விமர்சனத்திற்கு செந்தில் பாலாஜி ‘நச்’ பதில்..!

Sat Dec 20 , 2025
தவெக தலைவர் விஜய் கடந்த 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்.. திமுக ஒரு […]
senthil balaji vijay

You May Like