செப்டம்பர் 30, 2025 க்குப் பிறகு ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என்ற தகவல் பரவி வரும் நிலையில், மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது, அந்த பதிவில் “ செப்டம்பர் முதல் 500 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செப்டம்பர் 30, 2025 க்குப் பிறகு ஏடிஎம்களி 500 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இனிமேல் 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ATMகளில் கிடைக்கும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2025 இறுதிக்குள் ATMகளில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் RBI அறிவுறுத்தியுள்ளது என்று பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பத்திரிகை தகவல் பணியகம் (PIB) இந்த பதிவை போலியானது என்று தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு இதுபோன்ற எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் கூறியது. இந்த போலி செய்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அரசாங்கத்தில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும் PIB கூறியது. 500 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும். அதாவது நீங்கள் முன்பு போலவே இதைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதி
ரிசர்வ் வங்கி சமீபத்தில் விதிகளை மாறியது செப்டம்பர் 30, 2025 க்குள், ஏடிஎம்களில் 75 சதவீத நோட்டுகள் ரூ.100-200 ஆக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது மார்ச் 31, 2026 க்குள் 90 சதவீதமாக அதிகரிக்கும். தளர்வான நாணயப் பிரச்சினையைக் குறைப்பதும், வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமத்தைத் தவிர்ப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்..
Read More : ரூ.1000 கோடி.. இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் பெரும் தொகையை இழக்கிறார்கள்… காரணம்?