செங்கோட்டையனை நீக்கிய கையோடு அடுத்த மூவ்.. தேதி குறித்த இபிஎஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு..

eps sengottaiyan new

ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்..


ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் திட்டவட்டமாக கூறி வருகிறார்.. எனினும் எந்த நிபந்தனையும் கட்சியில் இணைய தயார் என்று ஓபிஎஸ் தரப்பு கூறினார்.. அதையும் இபிஎஸ் பொருட்படுத்தவேவில்லை.. சசிகலாவும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்று கூறி வருகிறார்..

இந்த சூழலில் தான், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்…

ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. எனினும் செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்..

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..

இதையடுத்து நேற்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்..

இதனால் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் அதிமுகவில் தன்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தார்..

ஆனால் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.. மேலும் “ துரோகம் இழைத்தால் இதுதான் நிலைமை. துரோகம் செய்பவர்கள் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக கூற முடியும்.” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் வரும் 5-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 – புதன் கிழமை
காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

செங்கோட்டையன், இபிஎஸ், டிடிவி, சசிகலா ஒன்று சேர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ”துரோகம் இழைத்தால் இதுதான் நிலைமை.. கட்சி விதிகளின் படியே செங்கோட்டையன் நீக்கம்..” இபிஎஸ் விளக்கம்..!

RUPA

Next Post

இந்த அறிகுறிகள் இருக்கா? அது வயிற்றுப் புற்றுநோயாக இருக்கலாம்..! உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..!

Sat Nov 1 , 2025
வயிற்றுப் புற்றுநோய் (Stomach or Gastric Cancer) தற்போது மிகவும் பொதுவான நோயாக மாறி வருகிறது.. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது… ஒவ்வொரு 1 இலட்சம் பேரில் சுமார் 7 பேருக்கு வயிற்றுப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது, மேலும் அதில் 3 பேர் மரணமடைகின்றனர். நிபுணர்கள் கூறுவதாவது, ஆண்கள் மற்றும் பெண்களில் சுமார் 0.8 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். […]
what are stomach cancer symptoms 1

You May Like