பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் மயங்கி விழுந்த பெண், ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் உள்ள புத்த கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள BMP-3 அணிவகுப்பு மைதானத்தில், ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புப் பணியில் ஒரு பெண் பங்கேற்றார். அப்போது நடந்த போட்டியில் அவர் மயக்கமடைந்ததால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது..
ஜூலை 24 ஆம் தேதி, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.. இந்த புகாரின் அடிப்படையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகியோர் இரண்டு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக புத்த கயா சவுரப் ஜெய்ஸ்வால் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆதாரங்களைச் சேகரிக்க ஒரு தடயவியல் குழு அனுப்பப்பட்டது. மேலும் இந்தக் குழு அந்தப் பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண உதவியது. போத் கயா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை விரைவில் முடிக்கப்படும் என்றும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் விரைவான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் SSP ஆனந்த் குமார் தெரிவித்தார். எனினும் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண், ஆம்புலன்ஸில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..