பாலியல் இன்பத்திற்காக தனது பிறப்புறுப்பில் (rectum) சொருகிய மாய்ஸ்சரைசர் (moisturiser) பாட்டிலை 2 நாட்களுக்கு பின் இளம்பெண்ணின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமலேயே மருத்துவர்கள் அகற்றினர்.
டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 2 நாட்களாக கடும் வயிற்று வலியால் மலம் கழிக்க முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, பாலியல் இன்பத்திற்காக அந்தரங்க உறுப்பில் மாய்ஸ்சரைசர் பாட்டிலைச் சொருகியதை மருத்துவர்களிடம் அப்பெண் கூறினார்.
இந்தி நாளிதழின் அறிக்கையின்படி, முதலில் ஒரு உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அந்தப் பொருளை அகற்ற முயன்றனர், ஆனால் முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் எக்ஸ்ரே செய்து பார்த்ததில் மேல் மலக்குடல் பகுதியில் பாட்டில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து குடல் துளையிடும் அபாயம் மற்றும் அவரது நிலை மோசமடைந்ததால், உடனடியாக அவசர அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து மருத்துவர்கள் தருண் மிட்டல், ஆஷிஷ் டே, அன்மோல் அஹுஜா, ஷ்ரேயாஸ் மங்லிக் மற்றும் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் பிரசாந்த் அகர்வால் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு பாட்டிலை அகற்றும் முயற்சியில் இறங்கினர். சிக்மாய்டோஸ்கோபியைப் பயன்படுத்தி, வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யாமலேயே பாட்டிலை வெற்றிகரமாக அகற்றினர். இதற்கு வலி குறைந்து அப்பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான குடல் துளையிடலைத் தடுக்க இதுபோன்ற சந்தர்ப்பங்களில் “சிக்மாய்டோஸ்கோபி (sigmoidoscopy), லேப்பரோஸ்கோபி (laparoscopy) போன்ற எண்டோஸ்கோபி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பாதுகாப்பாக கையாள உதவுகின்றன என்று டாக்டர் அஹுஜா கூறினார்.