அமெரிக்காவின் வட கரோலினா மாநில பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சந்திரபிரபா சிங் (44) என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர், தனது கணவனுடன் ஏற்பட்ட தகறாரில் கணவன் அரவிந்த் சிங்கை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் கடந்த அக்டோபர் 12 அன்று, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடந்தது. அரவிந்த் சிங்கின் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். போலீசார் விசாரணையில், சந்திரபிரபா சிங் கூறியதாவது: “காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் உதவி கேட்டேன். அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருந்தினேன்.
கையில் கத்தியுடன் திரும்பும்போது தற்செயலாக காயம் ஏற்பட்டது” என தெரிவித்தார். அரவிந்த் சிங் மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றச்சாட்டியுள்ளார். இந்நிலையில், சந்திரபிரபா சிங் ஜாமீனில் வெளிவந்துள்ளார் மற்றும் பள்ளியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மதுரையில் 155 கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..



