உலகம் முழுவதும் பல நூதன சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது ஆன்மாவை ரூ.33 கோடிக்கு ($4 மில்லியன்) விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ரத்தத்தில் கையெழுத்தானது.
இந்த தகவலை டெய்லி ஸ்டார் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய சமூக வலைதளமான Vkontakte-ல், டிமிட்ரி என்ற நபர் தனது ஆன்மாவை வாங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்… ஆரம்பத்தில், அனைவரும் இதை நகைச்சுவை என்று நினைத்து கருத்து தெரிவித்து வந்துள்ளனார்.. ஆனால், இந்தப் பதிவை சீரியஸாக எடுத்துக் கொண்ட கரினா என்ற பெண் தனது ஆன்மாவை விற்க ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நான் எனது முதல் ஆன்மாவை வாங்கினேன் என்று பதிவிட்ட டிமிட்ரி,. இந்த ஒப்பந்தத்தின் ஆவணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த ஒப்பந்தம் ரத்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. நான் டேவி ஜோன்ஸைப் போலவே உணர்கிறேன் என்று டிமிட்ரி எழுதினார்.
இந்தப் பெண் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? அந்தப் பெண் தனது ஆன்மாவை விற்க செய்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறுகிறார். பணம் அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில், அவர் லாபுபு பொம்மை மற்றும் பிரபல பாடகி நடேஷ்டா கதிஷேவாவின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கினார்.
“நான் ஆன்மா கொள்முதல் ஒப்பந்தத்தை நகைச்சுவையாகக் கொடுத்தேன்,” என்று டிமிட்ரி கூறினார். “ஆனால் ஒரு பெண் அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார் என்று எனக்குத் தெரியாது.” 33 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஆன்மாவை டிமிட்ரி என்ன செய்வார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது..