இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை, மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல தீவிரமான நோய்களைச் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை தீவிர நோயில் அடங்கும். இதில் மாரடைப்பு தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே பொதுவானதாக மாறிவிட்டது.
பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வரும் என நிலவிவந்த கருத்து சமீபகாலமாக மாறியிருக்கிறது. 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. ஆனால், 40% பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான ஒரு குறிப்பிட்ட அறிகுறி கட்டாயம் தென்படும் என ஆய்வு சொல்கிறது. சர்குலேஷன் ஜர்னலில் வெளியான அறிக்கையில், மாரடைப்பு மற்றும் அஜீரணக்கோளாறு பிரச்சனைக்காக தொடர்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, மாரடைப்பு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அஜீரணக்கோளாறு பிரச்சனை இருக்குமாம்.
மாரடைப்புடன் தொடர்புடைய அஜீரணம் எப்படி இருக்கும்? உணவு சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களை குடித்தபிறகோ, ஏப்பம், வாயுத்தொல்லை, வயிறு உப்பியதுபோன்றோ அல்லது நிறைவாகவோ இருத்தல், நெஞ்செரிச்சல், உடல்நலமின்மை, வாயில் கசப்புணர்வு போன்ற அஜீரணப் பிரச்சனைக்கான சில அறிகுறிகள் தென்பட்டால் அலட்ச்சியமாக இருக்க வேண்டாம். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதம் முன்பே தோன்றும் ஆரம்பகட்ட அறிகுறிகள் பின்வருமாறு..
- அஜீரணம் – 39%
- மூச்சுத்திணறல் – 42%
- பதற்றம் – 36%
- அசாதாரண சோர்வு – 71%
- தூக்கத்தில் தொந்தரவு – 48%
மாரடைப்பின்போது ஏற்படும் அறிகுறிகள்…
- குளிர்ந்த வியர்வை – 39%
- மயக்கம் – 39%
- பலவீனம் – 55%
- மூச்சுத்திணறல் – 58%
- அசாதாரண சோர்வு – 43%
இந்த அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளாகும். எனினும், இந்த அறிகுறிகளை எல்லோரும் அனுபவிக்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இது அதன் தீவிரத்தன்மையில் வேறுபடலாம். எனவே இது போன்ற நிலைமைகளை அனுபவித்தால், குறிப்பாக திடீரென அல்லது கடுமையாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
Read more: 173 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் காட்சி..!! நடந்தது என்ன..?