தீனதயாள் அந்த்யோதயா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY–NRLM) கீழ், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, அரசு பல அடுக்கு கண்காணிப்பு மற்றும் மறுஆய்வு பொறிமுறையை நிறுவியுள்ளது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHGs) சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு கூறுகளை செயல்படுத்துவதில் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன:
அதன் படி, மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) உடனான வழக்கமான மதிப்பாய்வுகள், செயல்திறன் மதிப்பாய்வுக் குழு (PRC) கூட்டங்கள், மேலாண்மை தகவல் அமைப்புமுறை (MIS) மூலம் கண்காணிப்பு, கள வருகைகள் மற்றும் சுயாதீன கண்காணிப்பு, மூன்றாம் தரப்பு மதிப்பீடுகள் ஆகும்.
தீனதயாள் அந்த்யோதயா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தகுதியுள்ள மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் படி, தகுதியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அவற்றை சுய உதவிக் குழுக்களில் அணிதிரட்டுவதாகும். மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கங்கள் சமூக வள நபர்களின் (CRP-கள்) ஆதரவுடன் சுய உதவிக் குழுக்களை அணிதிரட்டி உருவாக்குகின்றன.
ஒரு உறுப்பினரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்டகுழுக்களில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, லோக் ஓஎஸ் (LokOS) என்ற மையப்படுத்தப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்புமுறை செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலி, சுய உதவிக் குழுக்களின் ஒவ்வொரு உறுப்பினரையும் அவர்களின் ஆதார் எண் மூலம் அடையாளம் காணும் வசதியைக் கொண்டுள்ளது மற்றும் நாட்டில் எங்கும் ஒரே ஆதார் எண்ணை இரண்டு முறை உள்ளீடு செய்வதை அனுமதிக்காது. எனவே, தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் எந்த முறைகேடுகளும் பதிவாகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.