தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் பணி வாய்ப்பு பெற ஜெர்மன் மொழி பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 9 மாதங்கள் நீடிக்கும் இந்த பயிற்சிக்கான கட்டணம், விடுதி செலவு அனைத்தும் தாட்கோ (TAHDCO) மூலமே ஏற்கப்படுகிறது.
என்னென்ன தகுதி:
* விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
* கல்வி அடிப்படையில் விண்ணப்பதார்கள் பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) பொது நர்சிங் மற்றும் செவிலியர் டிப்ளமோ (GNM Nursing) முடித்திருக்க வேண்டும். இவைமட்டுமின்றி பொறியியல் படித்தவர்களும் கலந்துகொள்ளலாம்.
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங் (EEE), பி.டெக் தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT) ஆகியவற்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி மொத்தம் 9 மாதங்கள் வழங்கப்படும். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் விடுதி வசதியும் தாட்கோ மூலம் ஏற்படுத்தி தரப்படுகிறது. விடுதிற்கான கட்டணம், பயிற்சிக்கான கட்டணம் ஆகியவற்றுக்கான செலவு தாட்கோ மூலம் ஏற்கப்படும். அதன்படி, இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி மூலம் தகுதி பெறும் நபர்களுக்கு பயிற்சி நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். அப்படி, தேர்வாகும் நபர்களுக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கும். அவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே மாதம் ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க https://tahdco.com/ என்ற தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, வருமான சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், ஆதார் எண், புகைப்படம், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அவசியமாகும். வெளிநாட்டில் பணி எதிர்பார்ப்பவர்களுக்கு ஜெர்மனி சிறந்த தேர்வாகும்.
Read more: “இறப்பது சட்டவிரோதம்” வினோத வழக்கத்தை இன்றும் பின்பற்றும் நகரம்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!