பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.
தோஷ்கானா வழக்கில் ஆணையத்தில் ஆஜராகியபோது தாக்கப்பட்டதாக ரஞ்சா புகார் அளித்துள்ளார். இப்புகாரை ஏற்றுக்கொண்டுள்ள காவல்துறை அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான மெஹிசின் ஷாநவாஸ் ரஞ்சா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பிடிஐ தலைவருமான இம்ரான் கான் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ரஞ்சா தாக்கப்பட்டதை அடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள அலுவலகத்தில் பி.டி.ஐ. ஆதரவாளர்கள் தோஷ்கானா வழக்கில் தகுதி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலக காவல் நிலையதி்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஃப் ஐ ஆரில் தோஷ்கானா வழக்கில் ஆணையத்தில் வாதியாக ஆஜரானபோது தான் தாக்கப்பட்டதை தெரிவித்துள்ளார். கொலை நோக்கத்துடன் தாக்குதல் நடத்தயுள்ளார். காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார். ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பி.டி.ஐ. கட்சி தொண்டரர்கள் கல்வீசி கார் கண்ணாடியை உடைத்தும் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இம்ரான் கான் பொதுச் செயலாளர் ஆசாத் உமர் மற்றும் 100 கட்சித் தொண்டர்கள் மீது பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு மற்றும் காவல்துறையின் புகார்களின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் நாட்டுத் தலைவர்கள் பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டியதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இம்ரான் கான் பொதுப் பதவியில் இருக்கத் தடை விதிக்கப்பட்டது. 2018 -2022 பிரீமியர் பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசு உடமையில் உள்ள பரிசுகளை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு பயணத்தின் போது பெறப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பி.டி.ஐ. ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாக பாகிஸ்தான் ஊடங்களில் செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.