வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை ‘கோஸ்தா-2″வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனா வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், புதிய வகை கொரோனா வைரஸை அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் கண்டறிந்துள்ளனர். ரஷ்ய வெளவால்கள் மூலம் பரவும் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு ‘கோஸ்தா-2’ என அந்த குழுவினர் பெயர் சூட்டியுள்ளனர்.
வெளவால்கள் மூலம் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதன் மூலம் அடையும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று முடிவுக்கு வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், உருமாற்றம் பெற்ற புதிய வகை ‘கோஸ்தா-2’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான டாக்டர். பிரக்யா யாதவ் கூறுகையில், ‘ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ள, ‘கோஸ்தா-2’ ( SARS-COV2) வைரஸால் தற்போது வரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே போடப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி இதை கட்டுப்படுத்துமா? என்று இனிதான் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் ஜிகா, நிஃபா, குரங்கு அம்மை, கோவிட் 19 போன்ற பல பெருந்தொற்றுகளை எதிர்கொண்ட அனுபம் உள்ளது. எனவே எப்படிப்பட்ட சூழ்நிலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.