fbpx

’ஐய்யோ மொத்தமும் போச்சே’..!! டைட்டானிக் பாணியில் Propose..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

காதலை புரோப்போஸ் செய்யும் தருணங்கள் எவருக்குமே வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். அதுவும் அந்த காதலை வெளிப்படுத்துவதற்கான நேரம், இடம் ரொமான்ட்டிக்காக இருக்க வேண்டும் என்ற மெனக்கெடலுக்காகவே தனி அபிப்பிராயம் தொற்றிக்கொள்ளும். ஆனால், அப்படி எல்லாம் வாய்க்கப் பெற்றும் சரியாக காதலை சொல்லும் போது எதிர்பாராத விதமாக ஏதேனும் குளறுபடி நடந்தால் மொத்த ஏற்பாட்டையும் உருக்குலைத்தது போலாகிவிடும். அப்படியான ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. ஆனால், ஒருவழியாக அதனை சரி செய்து தனது காதலை வெளிப்படுத்தியிருக்கும் ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு பலரது ரியாக்‌ஷன்களையும் பெற்று வருகிறது.

’ஐய்யோ மொத்தமும் போச்சே’..!! டைட்டானிக் பாணியில் Propose..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஸ்காட் க்ளைன் என்ற நபர் தனது காதலி சுசி டக்கர் மற்றும் நண்பர்களுடன் நடுக்கடலுக்கு போட்டில் சென்றிருக்கிறார்கள். அங்கு சன்செட் ஆகும் வரை அனைவரும் அளவளாவிக் கொண்டிருந்த போது ஸ்காட்டும், சுசியும் டைட்டானிக் ரோஸ், ஜாக் போல கடலை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து ஸ்காட் தனது பாக்கெட்டில் இருந்து மோதிரத்தை எடுத்து சுசியிடம் காட்டி திருமணம் செய்துக் கொள்ளலாமா? எனக் கேட்க முற்பட்ட போது, எதிர்பாராமல் அந்த ரிங் பாக்ஸ் தண்ணீரில் விழ, ஒரு நொடி கூட யோசிக்காமல் டக்கென தண்ணீரில் குதித்த ஸ்காட் ,கடல் ஆழத்தில் மோதிரம் மூழ்கிடாதபடி கைப்பற்றி, மிதந்தபடியே சுசியிடம் தனது புரொப்போசலை சொல்லியிருக்கிறார்.

இந்த ட்விஸ்ட்டிங் புரோப்போசல் நிகழ்வை ஸ்காட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, “100% உண்மையாக நடந்தது.. 100% இதை கண்டிப்பாக மறக்கவே மாட்டேன்” என கேப்ஷன் இட்டிருக்கிறார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் கேலியாக சிரித்திருந்தாலும், இறுதியில் ஸ்காட் புரோப்போஸ் செய்தது நெகிழ்ச்சியான தருணம் என பதிவிட்டிருக்கிறார்கள்..!

வீடியோவை காண: https://www.facebook.com/844940146/videos/879159723443143/

Chella

Next Post

அதிரடி அறிவிப்பு..!! இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை..!! உற்சாகத்தில் பணியாளர்கள்..!!

Tue Nov 29 , 2022
பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி, வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் நடைபெறும் என அறிவித்துள்ளன. இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர், அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும், பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால், தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற […]

You May Like