ஸ்டார்பக்ஸின் காஃபி மற்றும் சப்வே-ன் சாண்ட்விட்ச் போன்றவற்றில் வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மீது அவர்களது பெயர்களை எழுதுவது வழக்கம். இதனை பெரும்பான்மையான மக்கள் விரும்புவதும் உண்டு. இருப்பினும் சமயங்களில் அவ்வாறு பெயர்களை எழுதுவதால் சில குளறுபடிகளும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், பெண் ஒருவரின் சாண்ட்விட்ச்சில் அவர் ஆர்டர் செய்த உணவின் பெயரை ஆங்கிலத்தில் B***h என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இதைக் கண்டு அதிர்ந்துப்போன அப்பெண் ரெஸ்டாரென்ட் ஊழியரிடம் சென்று கேட்டபோது அவர் கொடுத்த விளக்கம்தான் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதுதொடர்பாக @SpoorkyIrishLady என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் வாங்கியிருந்த சாண்ட்விட்ச் பார்சலை எடுத்த போது B***h என எழுதப்பட்டிருந்ததுதான் என் கண்ணில் பட்டது. உடனே ரெஸ்டாரென்ட் மேனேஜரிடம், இதுகுறித்து விளக்கம் கேட்டேன்.
இதைக் கேட்ட மேனேஜர் சற்று குழம்பிப்போய், கொஞ்சம் நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின்னர், நீங்கள் BLT வகை சாண்ட்விட்ச்சை Cheese உடன் ஆர்டர் செய்ததால் BLTCH என ஷார்ட்டாக குறிப்பிட்டோம் என்றதும் திகைத்துப் போய்விட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றதோடு இதேப்போன்று பலரும் Black Olive – BO என்றும், Vegetarian Delight Pizza – VD என்றும் குறிப்பிடுவார்கள் என்றும் விளக்கமளித்திருக்கிறார்கள். மேலும், BLTCH என்பதை ஆங்கிலத்தின் Upper case எழுத்துகளில் முறையாக எழுதியிருக்கலாம் என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.