fbpx

’நீ செத்தா தான் பணம் கிடைக்கும்’..!! 1000 அடி உயரத்தில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!!

இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நிறைமாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற கொடூர சம்பவம் துருக்கி நாட்டில் அரங்கேறியிருக்கிறது.

துருக்கியின் முக்லா என்ற பகுதியில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்குக்கு 41 வயதான ஹகன் அய்சல் என்பவர் தனது 32 வயதான மனைவி செம்ரா அய்சலுடன் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்றிருக்கிறார். அப்போது, 7 மாதம் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் செம்ரா அய்சல். சுற்றுலாவுக்காக சென்றிருந்த போது ஹகன், செம்ராவை 1000 அடி உயரத்தில் இருக்கும் பகுதிக்கு செல்ஃபி எடுப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் திட்டம் போட்டு எவரும் அருகே இல்லாத நேரமாக பார்த்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி செம்ராவை 1000 அடி உயர மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

’நீ செத்தா தான் பணம் கிடைக்கும்’..!! 1000 அடி உயரத்தில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!!

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஹகன் அய்சலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கு விசாரணையின் போது செம்ராவிற்கு உயரத்தை கண்டால் பயப்படுவார் என நன்றாக தெரிந்திருந்தும் ஹகன் அய்சல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொன்றிருக்கிறார் என ஊர்ஜிதமானது. இதுபோக ஏன் இந்த கொலையை செய்தார் என்பது குறித்து அறிந்து நீதிபதிகளே அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், மனைவி செம்ரா பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணமான 25,000 டாலர் அதாவது ரூ.20.72 லட்சத்தை பெறுவதற்காக ஹகன் இப்படியான கொடூர செயலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

’நீ செத்தா தான் பணம் கிடைக்கும்’..!! 1000 அடி உயரத்தில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!!

ஆனால், முதலில் தனது மனைவியை தான் கொல்லவில்லை என்று தொடர்ந்து சாதித்து வந்திருக்கிறார். இருப்பினும் குற்றம் நிரூபனமானதால் சிறையில் அடைக்கப்பட்ட ஹகனிற்கு தற்போது வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு ஹகன் அய்சல் விடுதலை ஆவதற்கு 30 ஆண்டுகளாக தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Chella

Next Post

செங்கோட்டை தீவிரவாத தாக்குதல் குற்றவாளிக்கு தூக்கு…

Thu Nov 3 , 2022
டெல்லி செங்கோட்டையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு நபர் என 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது ஆரிப்புக்கு […]

You May Like