நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!… ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் விலகல்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார்.

டெஸ்ட் உலகக்கோப்பை பைனல் எனும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தியா இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனேவே அவர் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பெங்களூரு அணியிலும் விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஹேசல்வுட் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (W), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (W), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சானே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (VC) , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Kokila

Next Post

சச்சினுடன் கோலியை ஒப்பிடுவதா?... முட்டாள்கள்தான் அதை செய்வார்கள்!... பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்!

Tue Jun 6 , 2023
சச்சின் முன்பாக நீங்கள் எந்த பேட்ஸ்மனையும் ஒப்பிட முடியாது, விஷயம் தெரியாத முட்டாள்கள் தான் அப்படி செய்வார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை சாப்பிடுபவர்கள் முட்டாள்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். தற்போதைய கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, கிரிக்கெட்டில் அவ்வப்போது பல […]

You May Like