அடடே சூப்பர் குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தக்காளி விலை..!! அதிகளவில் வாங்கிச் செல்லும் மக்கள்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையான நிலையில், கடந்த 31ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சென்னையில் தக்காளியின் விலை குறைய தொடங்கிய நிலையில், வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன் ரக தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ 80 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி உழவர் மற்றும் காய்கறி சந்தையில் 2 மாதங்களுக்கு பின்பு தக்காளி விலை கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தக்காளி விலை குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிகளவில் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! பைக் ரேசின் போது நேர்ந்த விபத்து..!! 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

Sun Aug 6 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டு கோட்டையில் பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான ரேஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடந்து வருகிறது. இந்த மைதானத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கார், பைக் ரேஸ் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் சார்பில் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான பைக் ரேஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது […]

You May Like