வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் இடம் குளியலறை தான். ஆனால் அதே சமயம் அதிகமான அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் தேங்கும் இடமும் அதுவே. காலை எழுந்தவுடன் முதலிலேயே பயன்படுத்தப்படுவது குளியலறை என்பதால், அதை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
பலர் சோப்போ, சோப்பு தூளோ கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்வார்கள். ஆனால், டைல்ஸ்களில் படிந்த பிடிவாதமான உப்புக்கறை, அழுக்கை அகற்றுவது கடினம். இப்போது அந்த பிரச்சனைக்கு ஒரு எளிய வீட்டுத் தீர்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாத்ரூம் டைல்ஸ்களில் உள்ள பிடிவாதமான கறைகளை நீக்க மூன்று பொருட்கள் போதுமானது.. அவை..பேக்கிங் சோடா, டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் ஹார்பிக் பாத்ரூம் கிளீனர்.
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவும், 2 ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை ஹார்பிக் தடவிய டைல்ஸின் மேல் பூசி, சலவை பிரஷ் கொண்டு சிறிது நேரம் தேய்க்கவும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால், டைல்ஸ் பளபளப்பாக மாறும்.
ஹார்பிக் பாத்ரூம் கிளீனரில் உள்ள அமிலம் டைல்ஸில் உள்ள கறைகளை நீக்க உதவியாக இருக்கும். இதனுடன் பேக்கிங் சோடா மற்றும் டிடர்ஜென்ட் பவுடர் சேர்ப்பதால் அமிலத்தின் திறன் அதிகரிக்கிறது. அதனால், தான் டைல்ஸ் மீது பூசியவுடன் அதில் உள்ள அழுக்குகள் ஊற ஆரம்பிக்கும். தூரிகையால் தேய்த்தவுடன் ஓடுகளில் உள்ள அழுக்குகள் சுத்தமாகிவிடும்.
Read more: இந்த 7 ராசிக்காரர்கள் கேதுவின் பலத்தால் இரட்டிப்பு பலன்களைப் பெறுவார்கள்! பொற்காலம் தொடங்கப் போகுது!