காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விண்ணப்பிக்கலாம்…! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

tn Govt Kallan 2025

காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.


மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி ததொகுப்பு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தாெகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபராகவோ (குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்களின் 2025-2026 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில், சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் Liecht smocar சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் சுய தவிக்குழு விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுய உதவிக்குழு உறுப்பினராக செயல்பட்டு வர வேண்டும். தனிநபராகவோ குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்படி விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வந்தாச்சு அறிவிப்பு..!! “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 10,000 வீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Sep 18 , 2025
குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் புதிதாக 10,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி, ஏழை மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை […]
Kalaignar Kavavu illam 2025

You May Like