கவனம்…! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!

10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடைபெறவுள்ள ஏப்ரல் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள்‌ தங்களது USER ID மற்றும்‌ PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


மேலும்‌, ஏப்ரல்‌ 2023 பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில்‌ பள்ளி மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள்‌ இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில்‌ உரிய திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்‌, முதல்வர்களிடம்‌ அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடிக்கிற வெயிலை சமாளிக்க உதவும் சம்மர் சீக்ரெட் டிப்ஸ் இதோ!...

Mon Mar 27 , 2023
கோடைக்காலத்தில் வாட்டும் வெயிலை சமாளிக்கும் வகையில் உணவுப்பொருட்கள் நீர்ச்சத்து கொண்ட பானங்களை அருந்தவேண்டும். அந்தவகையில் வெயிலை சமாளிக்க இந்த 5 வழிமுறைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். வெயில் காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகளும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் அவ்வபோது தண்ணீர் அருந்தி நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதுடன் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றலாம். கோடை காலத்தில் நேரடியாக தண்ணீர் மட்டுமே அருந்த […]

You May Like