அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2025 நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, நவம்பர் 2025 மாத அரிசியை அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள் வழக்கம்போல் தங்களுக்குரிய அரிசியினை நவம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த வசதியினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருசதீஸ் தெரிவித்துள்ளார்கள்.



