குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலையில் இருந்து 31.03.2025-ம் தேதியோ அல்லது அதற்கு முன்ன்னதாகவோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான திருமணத் துணைவர் ஏற்கனவே கோரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட ஆறு மாத தகுதிவாய்ந்த சேவைக்கும், கடைசியாகப் பெறப்பட்ட அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்கு மொத்த தொகை (ஒரு முறை மட்டும்), தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர நிரப்புத் தொகை ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தப்பட்ட தொகை + அகவிலைப்படி நிவாரணம் – பிரதிநிதித்துவ வருடாந்திரத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பொருந்தக்கூடிய பொதுவான வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதங்களின்படி எளிய வட்டியுடன் கூடிய நிலுவைத் தொகை.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளை பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி பெறலாம்: நேரடியாக பெறுவது – ஓய்வூதியத் தொகையை விடுவிக்கும் அதிகாரியைச் சந்தித்து அதற்கான படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் (சந்தாதாரருக்கு பி 2 – & சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட வாழ்க்கைத் துணைக்கு பி4 / பி6) கூடுதல் சலுகைகளை பெற முடியும். இதற்கான படிவத்தை பின்வரும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்- www.npscra.nsdl.co.in/ups.php
ஆன்லைன் முறை – ஆன்லைன் மூலம் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு www.npscra.nsdl.co.in/ups.php – என்ற இணையதள முகவரியைப் பார்வையிடவும். இத்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 30 ஜூன் 2025 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: குட் நியூஸ்…! தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி…!