’உன்னால குழந்தை பெத்துக்கவே முடியல’..!! ’நீயெல்லாம் பேசுறியா’..? திட்டிய தந்தையை தீர்த்துக் கட்டிய மகன்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (65). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி காலையில் இவர் பணி முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். அங்கிருந்து சிறிது தூரத்தில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தந்தைக்கு வலிப்பு நோய் இருப்பதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருக்கலாம். இதுதொடர்பாக போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டாம் என மருத்துவ ஊழியர்களிடம் மகன் கூறியதால் அவர்களும் தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்த 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். முதலில் அனீஷ்குமார் கூறியபடி போலீசில் தகவல் தெரிவிக்காத ஊழியர்கள், பிரபாகரன் உயிரிழந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மகன் கூறியடி, பைக்கில் இருந்து கீழே விழுந்து பிரபாகரன் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பிரேத பரிசோதனையில் அறிக்கையில், பிரபாகரனின் தலையில் வெட்டு காயம் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனீஷ்குமார் உள்பட 3 பேர் வசமாக சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது பிரபாகரனை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, அனீஷ்குமார், ராஜா (25), சுதன் (21) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

அதில், டிப்ளமோ முடித்த நான் சமையல் அறைக்கு கப்போடு செய்து கொடுக்கும் பணி செய்து வந்தேன். கடந்த 2019இல் அனுஷா என்பவரை மணந்தேன். பின்னர் திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அப்போது தந்தை பிரபாகரன், குழந்தை பெத்துக்க முடியாதவன், வாய் பேசுறான் பார் என என்னை திட்டியதால் ஆத்திரத்தில் இருந்தேன். ஆகையால் ஆட்களை ஏவி தந்தையை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

Read More : அடடே..!! இனி இவ்வளவு ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

Chella

Next Post

வாட்டி வதைக்கும் கோடை வெயில்... குடிநீருக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு!

Sat Apr 27 , 2024
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது […]

You May Like