நீங்க உள்ள வரக்கூடாது! அண்ணாமலையார் கோயிலில் வெடித்த சர்ச்சை! அமைச்சர்கள் – செய்தியாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

Thiruvannamalai 2026

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோருடன் செய்தியாளர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது எனவும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வுக்காக அமைச்சர்களுடன் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே சென்ற நிலையில், அரசு பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களை மட்டும் தடுப்பது எந்த வகையில் நியாயம் எனக் கூறி அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் ஒருவர் இஸ்லாமிய மத அடையாள தொப்பி அணிந்து கோயிலுக்குள் சென்றதாக கூறி கோயில் நிர்வாகிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அண்ணாமலையார் கோயிலுக்குள் வழிபட யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் பிற மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆடைக் கட்டுப்பாட்டை மீறி செல்வது ஏற்புடையதல்ல என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அமைச்சர்களின் ஆய்வின்போது கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

Read More : ஓபிஎஸ் மட்டும் எதுக்கு? சேகர்பாபுவையும் அதிமுகவில் சேர சொல்லுங்க! எஸ்பி வேலுமணிக்கு அதிமுக கண்டனம்! மீண்டும் வெடிக்கும் போர்!

Next Post

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? உடைத்த திருமாவளவன்! அதிர்ச்சியில் முதல்வர் விஜய்!

Sat Oct 17 , 2026
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மனம் திறந்தார். அண்மைக்காலமாக, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவோடு கூட்டணிக் கட்சியின் பொது வேட்பாளராக திருமாவளவன் களமிறக்கப்பட உள்ளதாகவும், இத்தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமையவிருக்கும் தவெக அமைச்சரவையில் அவருக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. இத்தகைய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டி ஒன்றில் விளக்கம் […]
Thirumavalavan new 2

You May Like