”கண்டிப்பா வருத்தப்படுவீங்க..” அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..! பல அரபு நாடுகளில் பதிலடி தாக்குதல்..! பெரும் பதற்றம்..!

iran isreal

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார்.


ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய எச்சரிக்கை அமலில் உள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து தங்கள் வான்வெளியை மூடிய நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கும், பல விமான நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

மேலும், தெஹ்ரானின் சில பகுதிகளில் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டுவிட்டது.. ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு, இஸ்ரேல் ராணுவம் ஆப்ரேஷன் ரோரிங் லயன் என்ற பெயர் வைத்துள்ளது..

இந்த நிலையில் இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது.. ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தியவர்களை அவர்களின் செயல்களுக்கு வருத்தப்பட செய்வோம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக முழுமையாக தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட இந்த புதிய ராணுவத் தாக்குதல், சர்வதேச சட்டங்களையும் மற்றும் ஐ.நா சபை விதிகளையும் மீறும் செயல்.. இந்த தாக்குதலை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நேரடியாக மீறும் நடவடிக்கையாக ஈரான் கருதுகிறது. அதனால், தீர்மானமான பதிலடி கொடுக்க உரிமையை ஈரான் முழுமையாக வைத்துள்ளது.. பிராந்திய அமைதியும் நிலைத்தன்மையும் காக்க, பதற்றம் அதிகரிக்காமல் இருக்க ஈரான் மக்கள் எப்போதும் பொறுமையும் கட்டுப்பாடையும் காட்டி வந்துள்ளனர்,” என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பல்வேறு அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.. பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது.. கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது..

இதையடுத்து கத்தாரில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.. ராணுவ தளங்கள் உள்ள பகுதியில் இருந்து தூரமான இடங்களுக்கு செல்லுமாறு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.. கத்தாரில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்கவும், வெளியே வருவதை தவிர்க்குமாறும் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது..

இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் வான்வெளி தாக்குதல் காரணமாக ஏர் அரேபியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ஈரான், ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று நாள் முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று ஏர் அரேபியா அறிவித்துள்ளது..

Read More : “இதை மீறினால் மரணம் உறுதி..” ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை…! இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதலால் போர் பதற்றம்..!

RUPA

Next Post

IPL 2026 ஒத்திவைப்பு..? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் காரணமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Sat Feb 28 , 2026
இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு ஐபிஎல் திருவிழாவை நோக்கி திரும்பியுள்ளது. மார்ச் மாதம் பிறந்தாலே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொள்ளும் சூழலில், இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களே, இந்த அட்டவணை தாமதத்திற்கு முக்கியக் […]
IPL Cup 1

You May Like