பெங்களூரு HSR லேஅவுட் பகுதியில் வசித்து வரும் முகமது இசாக் (28) என்பவருக்கு, கடந்த வருடம் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், இளம்பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், திருமணம் செய்ய முகமது இசாக் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், HSR லேஅவுட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது: “கடந்த வருடம் அக்டோபர் 30ஆம் தேதி முகமது இசாக் எனை பெங்களூருவுக்கு வரச்சொல்லி, தனிச்சந்திரா பகுதியில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு திருமணம் செய்வதாக கூறி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். பின்னரும் அடிக்கடி பெங்களூருவுக்கு வரச்சொல்லி அதேபோல் நடந்துகொண்டார்.
சமீபத்தில், அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது, அவர் என்னுடன் தகராறு செய்து, திருமணம் செய்ய மறுத்தார். மேலும் என்னை கொலைசெய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் நான் தற்கொலை முயற்சியும் செய்தேன். பின்னர் அவரது குடும்பத்தினர் சமாதான பேச்சு நடத்தினார்கள்.
அப்போது முஸ்லிம் மதத்திற்கு மாறினால் மட்டுமே திருமணம் செய்வேன் என்று கூறினார். நான் அதற்கு மறுத்ததால், இப்போது வேறொரு முஸ்லிம் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்,” என்று அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில், HSR லேஅவுட் போலீசார் முகமது இசாக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: உங்கள் சமையலறையில் இந்த பாத்திரங்கள் இருக்கா? சிறுநீரக பிரச்சனைகள் வரலாம்.! கவனம்!



