தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சையில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் இன்று புதுக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்..
இந்த நிலையில் புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதலளித்த முதல்வர் “ அதிமுக அடிமையாகிவிட்டதால் டெல்லி தான் ஆதிக்கம் செலுத்துகிறது.. அதிமுக என்ற திராவிடக் கட்சி டெல்லியிடம் அடகு வைக்கப்பட்டது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. தோல்வியின் உச்சத்திற்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்..
எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.. யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது.. தமிழ்நாட்டுக்கு எத்தனை பாஜக தலைவர்கள் படையெடுத்தாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.” என்று கூறினார்..
தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் “ நடிகர்கள் யார் வந்தாலும் கவலை இல்லை.. நாங்கள் எங்களை வேலையை பார்த்து கொண்டிருக்கிறோம்.. நடிகர் பின்னால் சென்று விபத்துகள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.. நடிகர் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்.” என்று தெரிவித்தார்..
Read More : “உதயநிதி போட்டோ காட்டியதில் என்ன தவறு..? இபிஎஸ்-க்கு நன்றி இல்லை..” பொளந்து கட்டிய சசிகலா..!



