தேனியில் நடந்த குழந்தை திருமணம்! காதல் கணவன் மாயம்… புதுப்பெண் திடீர் முடிவு!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் தனது உறவினரான போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பெங்களூர் இஸ்ரோ மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான மணிவாசகத்தின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, ஜோதிடர் சுரேஷின் 19 வயது மகள் ஹேமலதாவிற்கும், மணிவாசகத்தின் மகன் சந்துருவிற்கும் காதல் மலர்ந்தது.

இதையடுத்து, காதலர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில் பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டி மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில் காதலர்கள் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுமண தம்பதிகள் இருவரும் மைனர் என்பதால் மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் முறைப்படி திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அவர்களது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சூழ்நிலையில், சந்துருவின் பெற்றோர் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் புதுப்பெண் ஹேமலதா புகார் செய்ததை அடுத்து போலீசார் சந்துருவை தேடி வந்தனர். இதனால், கணவனைக் காணாமல் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா, சிந்தலைச்சேரியில் உள்ள தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான சந்துரு, அவரது தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Baskar

Next Post

JEE முதன்மை தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு..!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Apr 4 , 2024
JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வாளர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 8, 9, மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வாளர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. 4, 5ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நுழைவு அட்டைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மற்றும் ஏப்.6, 8, 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் […]

You May Like