உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தன்னைத்தானே மந்திரவாதி என்று கூறிக்கொள்ளும் ஹரிபஜன் என்ற நபர், பேயோட்டுவதாக கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பல நாட்களாக தொண்டை வலி மற்றும் உணவு உண்ணுவதில் சிரமம் இருந்தது. மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால், சில கிராமவாசிகள் அச்சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறினர். அவர்களின் ஆலோசனையின் பேரில், அவரது குடும்பத்தினர் மத்தியப் பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபஜனை தொடர்பு கொண்டனர்.. அவர் தான் ஒரு மந்திரவாதி என்றும் தான் பேயோட்டுவதாகவும் கூறி உள்ளார்..
நவம்பர் 18 அன்று, ஹரிபஜன் 12 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்றார். அச்சிறுமியை பரிசோதனை செய்த பின்பு அவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் பூட்டிய அறையில் தனியாக சடங்கைச் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெற்றோரையும் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் வெளியே இருக்கும்படி அறிவுறுத்தினார்.. இந்த சடங்கின் போது சிறுமி அழலாம் அல்லது கத்தலாம் என்று எச்சரித்தார்.
இதுபோன்ற சடங்குகளுக்கு இது சாதாரணமானது என்பதால், யாரும் உள்ளே நுழையக்கூடாது என்று அந்த மந்திரவாதி கூறினார். பெற்றோர் எந்த மறுபரிசீலனையும் செய்யாமல் அவர் கூறுவதை அப்படியே நம்பி உள்ளனர்..
அந்த மந்திரவாதி தனது மகளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கதவைப் பூட்டியதாக பெண்ணின் தந்தை கூறினார். சிறிது நேரம் கழித்து, குடும்பத்தினர் அவள் அலறல் சத்தம் கேட்டது, ஆனால் அப்போது அந்த மந்திரவாதி உள்ளே நுழைய வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார். சுமார் அரை மணி நேரம் கழித்து, அவர் வெளியே வந்து, சடங்கு முடிந்துவிட்டதாகவும், அவள் இப்போது நலமாக இருப்பாள் என்றும் கூறி, உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
மந்திரவாதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பிறகு, தங்கள் மகள் தொடர்ந்து அழுவதை பெற்றோர் கண்டனர். பின்னர் அச்சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.. ஹரிபஜன் தனது ஆடைகளைக் கழற்றி, உடல் முழுவதும் எலுமிச்சையைத் தேய்த்து, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தன்னைத் துன்புறுத்தியதாக சிறுமி தன் குடும்பத்தினரிடம் கூறினாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் க்டந்த புதன்கிழமை பருவாசாகர் காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போலீசார் ஹரிபஜன் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Read More : லிப் டூ லிப் முத்தம்!. 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழக்கம்!. ஆய்வில் சுவாரஸிய தகவல்!



